ஏமன் நாட்டில் உள்ள மலை கிராமம் ஒன்றில் இதுவரை ஒரு சொட்டு மழை கூட பெய்தது இல்லையாம். இந்த கிராமம் பற்றி முழு தகவல்களை இந்த பதிவில் காணலாம்…!
உலகில் பல பகுதிகளில் மழை அதிகமாக பெய்யும் குறிப்பாக நம் நாட்டில் உள்ள மேகாலயாவின் மாசின்ராம் என்ற கிராமம் வருடம் முழுவதும மழை பெய்யும் கிராமமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் மழையே பெய்யாத பகுதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது போல் இது ஒரு பாலைவனம் இல்லை. இது ஒரு அழகிய கிராமம். இங்கு இதுவரை மழையே பெய்தது கிடையாதாம். ஏமன் நாட்டில் உள்ள இந்த கிராமத்தின் பெயர் அல்-ஹுதாயிப்.
இந்த கிராமம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கிராமத்தைச் சுற்றி, உண்மையில் மிகவும் வெப்பமான சூழலே இருக்கிறது. எனினும் குளிர்காலத்தில் காலையில் இப்பகுதி மிகவும் குளிராக இருந்தாலும், சூரியன் உதயமாகும்போது, மக்கள் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பண்டைய மற்றும் நவீன கட்டிடக்கலைகளை கிராமப்புற மற்றும் நகர்ப்புற அம்சங்களுடன் இணைக்கும் இந்த கிராமம் இப்போது ‘அல்-போஹ்ரா அல்லது அல்-முகர்மா’ மக்களின் கோட்டையாக உள்ளது. இவை ஏமன் சமூகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவர்கள் முஹம்மது புர்ஹானுதீன் தலைமையிலான முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இங்கு ஒருபோதும் மழை பெய்யாதற்கு காரணம் காரணம், இந்த கிராமம் மேகங்களுக்கு மேலே அமைந்துள்ளது. எனவே இந்த கிராமத்தின் கீழே தான் மேகங்கள் உருவாகி மழை பெய்யும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த கிராமத்தின் கண்கவர் காட்சிகளை அனுபவிக்கிறார்கள். மலைகளின் உச்சியில் இங்கு பல அழகான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மேல் இருந்து பார்க்கும் போது வெண் மேகங்களின் கூட்டம் கீழே நகர்ந்து செல்லும் காட்சி சுற்றுலாப் பயணிகளை பிரமிக்க வைக்கிறது.