அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பார்மில் தனது அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த 3 வயது சிறுமியை பெண் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில், சிறுமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென எழுந்து, நின்று கொண்டிருந்த சிறுமியை வேகமாக ரயில் தண்வாளத்தில் தள்ளிவிடுவது போன்ற வீடியோ இடம்பெற்றுள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்த சிறுமியின் முகம் தண்டாவளத்தில் இடித்தது. நல்ல வேளையாக அங்கிருந்தவர்கள் அடுத்த ரயில் வருவதற்குள் சிறுமியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில், சிறுமியின் நெற்றியில் இரத்தம் கசிவதற்கான சிவப்பு குறி காணப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து 32 வயதான ப்ரியானா லேஸ் வொர்க்மேன் என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முல்ட்னோமா மாகாண மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு பதிந்துள்ளது. அத்துடன் அந்த நபரை காவலில் வைத்திருக்கவும், ஜாமீன் இல்லாமல் வைத்திருக்கவும் கோருகிறது. எதற்காக சிறுமியை தள்ளிவிட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.