சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சாலையோர பாலத்திற்கு அடியில் துர்நாற்றம் வீசுயுள்ளது. உடனே அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது அதில், நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தப்பெண்ணை கொலை செய்து கை, கால்களை மடித்து சுருக்கி அந்த சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணிற்கு 20 முதல் 30 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது. உடல் நிர்வாண நிலையில் கிடந்ததால் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம். வேறு எங்கோ அந்தப்பெண்ணை கொலை செய்துவிட்டு உடலை கொண்டு இங்கு வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அடுத்த கட்டமாக அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் சூட்கேஸை இப்பகுதியில் வீசிச்சென்றது யார், கொலை செய்தவர் யார் என்று குறித்தெல்லாம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பெண்ணை கொலை செய்து உடலை 30 துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் வீசி சென்ற கொடூரம் நடந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூருவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக கூறுப்போட்டு பிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. குற்றவாளி என சந்தேகப்பட்ட நபரை போலீசார் நெருங்கும் போது அவர் தனது சொந்த கிராமத்தில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் சங்ககிரி அருகே இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; இனி பணம் எடுக்க வங்கியில் காத்திருக்க வேண்டாம்..!! ரேஷன் கடைகளிலே வருகிறது புது வசதி..