fbpx

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை வம்பிழுத்த இளைஞர்..!! தம்பியின் மோசமான செயலால் உயிரை பறிகொடுத்த அண்ணன்..!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கபிரியேல் புரத்தை சேர்ந்த தாமஸ் எடிசன் (25) என்ற இளைஞர், தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இதற்கிடையே, லால்குடி அருகே மாந்துறையை சேர்ந்த 21 வயது இளம்பெண் திருச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒரே பேருந்தில் பணி முடிந்து வீடு திரும்புவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இருவரும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் தனியார் பேருந்தில் ஏறிச்சென்றுள்ளனர். பேருந்தில் தாமஸ் எடிசன், அந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண், அவரது அண்ணன் குப்புசாமிக்கு (22) போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குப்புசாமி, பைக்கில் நண்பர்கள் இருவருடன் கபிரியேல்புரம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பேருந்தில் இருந்து இறங்கிய தாமஸ் எடிசனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் அந்த பகுதியில் திரண்டதால் தாமஸ் எடிசனை, பைக்கில் ஏற்றிக் கொண்டு மாந்துறை அக்ரஹாரம் சிவன் கோயில் அருகே சென்று மீண்டும் கட்டையால் சராமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்த தாமஸ் எடிசனின் தந்தை ஸ்டீபன் சந்தானம், அவரது மூத்த மகன் லூர்து ஜெயக்குமார் (27) ஆகியோர் அங்கு வந்து தாமஸ் எடிசனை மீட்கும் போது அவர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த லூர்து ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணன் குப்புசாமியை கைது செய்தனர். தலைமறைவான நண்பர்கள் மாந்துறை ராஜபாண்டியன் (24), சிவா (25) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

6ஆம் வகுப்பு மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம்..!! கதறியதால் கழுத்தறுத்துக் கொலை..!!

Thu Apr 20 , 2023
சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர், லிப்ட் கொடுப்பதாக கூறி சிறுமியை அழைத்துள்ளார். முதலில் சிறுமி டாக்சியில் ஏற மறுத்துள்ளார். இருப்பினும் அவர் அன்பாக பேசி வலுக்கட்டாயமாக கூறியதால் சிறுமி டாக்சியில் ஏறியுள்ளார். வீட்டுக்கு செல்லும் வழியில் பெட்ரோல் பங்க் பகுதியில் டாக்சியை நிறுத்தி, அந்த மாணவிக்கு தின்பண்டங்கள் மற்றும் பழச்சாறுகளை […]

You May Like