fbpx

வரும் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம்..! பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து முக்கியமான கோப்புகளை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததோடு, தலைமை அலுவலகம் சீல் வைக்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வரும் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம்..! பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு..!

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருகிற 15ஆம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமமுக கட்சியின் துணைத் தலைவருமான அன்பழகன் தலைமையில், காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்பதால், அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக கூட்டம் நடைபெற்ற அதே மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மீண்டும் கையில் எடுக்கும் திமுக அரசு..? மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம்..! சீமான் கண்டனம்

Thu Aug 4 , 2022
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மீண்டும் தொடங்கினால் பெருங்குடி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமுமாகும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான’ காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க […]
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..!! ’இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்’..!! சீமான்

You May Like