fbpx

ஓலா, ரேபிடோ சேவைகளுக்கு அதிரடி தடை..!! மீறினால் 10,000 அபராதம்..!! மாநில அரசு அறிவிப்பு..!!

பைக் டாக்சி சேவைகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. டாக்சி சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ரேபிடோ, ஓலா, உபர் போன்றவை ஆட்டோ, கார் டாக்சி சேவைகளை வழங்கி வந்த நிலையில், தற்போது பைக் டாக்சி சேவையையும் வழங்கி வருகிறது. இந்த சேவை விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன. மேலும் முறையான உரிமம் இன்றி, சாலை விதிகளை மதிக்காமல் பலர் பைக் டாக்ஸி சேவையில் பணிபுரிந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ரேபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தடையை மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டுமின்றி வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும், தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்களுக்கு இழக்க நேரிடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Chella

Next Post

பெரும் சோகம்...! நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...! மீட்பு பணி தீவிரம்...!

Tue Feb 21 , 2023
துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 213 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அண்டை நாடான சிரியாவிலும் […]

You May Like