fbpx

அகவிலைப்படி அதிரடி உயர்வு..!! பொங்கல் கருணைக்கொடையும் ரூ.3,000 ஆக உயர்வு..!! – தமிழ்நாடு அரசு

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோயில்களின் மேம்பாட்டிற்கும், கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000-த்தை ரூ.3,000-ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000-த்தை ரூ.4,000- ஆக உயர்த்தியும் வழங்க ஆணையிடப்பட்டது.

அகவிலைப்படி அதிரடி உயர்வு..!! பொங்கல் கருணைக்கொடையும் ரூ.3,000 ஆக உயர்வு..!! - தமிழ்நாடு அரசு

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் அகவிலைப்படியை 34%-இல் இருந்து, 38% ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், சுமார் 10,000 கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ. 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.2,000-ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’நீங்கள் அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்கள் மகிழ்ச்சி’..!! கவனம் ஈர்க்கும் விஜய்யின் அரசியல் பேனர்..!!

Tue Jan 10 , 2023
விஜய்யின் வாரிசு படத்தை வரவேற்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அரசியல் பேனர் கவனம் ஈர்த்து வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 11) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு படக்குழுவினர் மட்டுமின்றி விஜய்யின் ரசிகர்களும் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் பேனர் வைப்பது போஸ்டர் ஒட்டுவது என சுவாரஸ்யமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 10 திரையரங்குகளில் வாரிசு படம் திரையிடப்பட […]
’நீங்கள் அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்கள் மகிழ்ச்சி’..!! கவனம் ஈர்க்கும் விஜய்யின் அரசியல் பேனர்..!!

You May Like