அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், ரன் என பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன்.. தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் ரங் தே பசந்தி, 3 இடியட்ஸ், தனு வெட்ஸ் மனு போன்ற பல படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானார்.. அவரின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.. அந்த வகையில் தற்போது தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளார் வேதாந்த்..
ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 1500மீ தூரத்தை16 நிமிடங்களில் கடத்து தேசிய ஜூனியர் சாதனை படைத்துள்ளார்.. இதற்கு அத்வைத் என்பவர் சுமார் 16 நிமிடங்களில், அவர் 780 மீ நீச்சல் போட்டியில் சாதனை படைத்திருந்தார்.. இந்த சாதனையை மாதவனின் மகன் வேதாந்த் முறியடித்துள்ளார்.. இதுகுறித்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் மாதவன் பதிவிட்டு, மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் டென்மார்க் தலைநகர் கோபஹேனகனில் நடந்த டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்…. 2026-ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேதாந்த் தயாராகி வருகிறார்.. மகனின் ஒலிம்பிக் பயிற்சிக்காக தனது குடும்பத்துடன் துபாயில் குடிபெயர போவதாக மாதவன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..