ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, மன்னிக்கவும் எனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை மலையாளத்தில் பெரிய பூகம்பத்தை கிளப்பிய நிலையில், அடுத்தடுத்து நடிகர்கள் மீதும், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை நடிகைகள் முன்வைத்து வருகின்றனர்.
இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக தமிழ் சினிமா நடிகைகள் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் இதுகுறித்து நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.. ஹேமா கமிட்டி அறிக்கை தமிழ் திரையுலகிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த்.. மன்னிக்கவும் எனக்கு ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி எதுவும் தெரியாது என தெரிவித்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.
Read more ; ஏய் உனக்கு அறிவு இருக்கா? செய்தியாளர் கேள்விக்கு டென்சன் ஆன நடிகர் ஜீவா..!! என்ன விவகாரம்?