fbpx

தமிழக வெற்றி கழகம்: “வெடித்தது முதல் பஞ்சாயத்து..” “விவாதத்தில் வென்றால் 10 கோடி” தளபதி விஜய்க்கு நேரடி சவால்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நேற்றிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

மேலும் கட்சியின் கொள்கைகள் குறித்த விளக்கமும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி ஆரம்பித்த உடனேயே கட்சியின் பெயரை பற்றிய சர்ச்சைகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. விஜயின் கட்சி பெயர் குறித்து முன்னணி நடிகரும் அரசியல் விமர்சகருமான எஸ்.வி சேகர் ‘X’ தளத்தில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கட்சியின் பெயர் குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என தளபதி விஜய்க்கு சவால் விடப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தெரிவித்துள்ள தமிழக ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, ” கழகம் என்றால் சூதாடும் இடம் என்று அர்த்தம். இதை எப்படி கட்சிக்கு பெயராக வைக்கலாம் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.? மேலும் கழகம் என்ற வார்த்தை குறித்து தங்களுடன் விவாதித்து வெற்றி பெற்றால் 10 கோடி ரூபாய் பரிசு தருவதாகவும்” விஜய்க்கு சவால் விட்டிருக்கிறார்.

Next Post

பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம்.. 4 பேர் சடலமாக மீட்பு.! சிலிண்டரில் எரிவாயு கசிவே காரணம்.!

Sat Feb 3 , 2024
கிரேட்டர் நொய்டாவில் இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்கள், பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்தனர். எரிவாயு கசிந்ததே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் துஸ்யானா பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதனை வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர். வீட்டின் உரிமையாளர் ஈகோடெக்-3 காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில், […]

You May Like