fbpx

23 வருடங்களுக்குப் பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட ஜோடி.! தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்.!

தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தனது 68 வது திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாகிவிட்டார் தளபதி.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தை இயக்க யுவன் சங்கர் ராஜா நீண்ட நாட்களுக்குப் பிறகு தளபதி விஜய் படத்திற்கு இசையமைக்கிறார்.

Nice meet u #Prashant 😍 #Thalapathy68 Shooting Spot pic.twitter.com/Y6t5A8VVTN

— Laila (@Laila_laughs) December 7, 2023

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 80களில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மைக் மோகன் இந்தத் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை லைலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. தளபதி 68 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் லைலா. இவர்கள் இருவரும் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பிறகு இவர்களது புகைப்படம் ஒன்றாக வெளியாகி இருப்பது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது.

Next Post

இல்லத்தரசிகளே உஷார்..!! திடீரென வெடித்து சிதறிய வாஷிங்மெஷின்..!! தஞ்சையில் அதிர்ச்சி..!!

Sat Dec 9 , 2023
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் கவாஸ்கார தெருவை சேர்ந்தவர்கள் சிவகிரிநாதன், புவனேஸ்வரி தம்பதியினர். புவனேஸ்வரி வழக்கம்போல இன்று துணி துவைப்பதற்காக வாஷிங்மெஷினில் துணிகளை போட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயம், வாஷிங்மெஷின் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த மற்ற பொருள்களிலும் தீ பரவிய நிலையில், வீடு முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. தூங்கிக் கொண்டிருந்த சிவகிரிநாதன் பதறி […]

You May Like