நடிகை பானுப்பிரியா குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “பெரிய நாட்டியப்பள்ளி ஒன்றை நிறுவ வேண்டுமென்று சின்ன வயதிலிருந்து ஆசைப்பட்டார் பானுப்பிரியா. ஆனால், இப்போது வரை அவர் ஆசை நிறைவேறாமலேயே போயிருச்சு. அவருக்கு படிப்பு ஏறல. 13, 14 வயதில் பள்ளியை விட்டே நிற்க வேண்டியதாயிற்று. கலை மீதுள்ள ஆர்வத்தால், பானுப்பிரியாவை கூட்டிட்டு அவங்கம்மா ஏறாத சினிமா கம்பெனிகள் இல்லை. எல்லா திரைப்பட நடிகர்கள், நடிகைகள் வீட்டுக்கும் கூட்டிச் சென்றார்.
அப்படித்தான் நடிகை ஸ்ரீவித்யா கண்ணில் அவுங்க படுறாங்க. அப்போ பானுப்பிரியாவுக்கு 17 வயசு. பானுப்பிரியாவை பார்த்ததுமே, “இந்த பெண்ணுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. துல்லியமாக எதையும் தெரிந்து கொள்கிறாள். கலை, இசை, நடனம், திரைப்பட துறை என அனைத்திலும் அவருக்கு ஆர்வம் இருக்கு. மிகப்பெரிய இடத்துக்கு வருவார்” என்று கணித்து கூறியிருந்தார்.
பானுப்பிரியாவின் 17 வயதில், ஸ்ரீவித்யா இப்படி சொன்னது பிற்காலத்திலும் ஸ்ரீவித்யா சொல்லும் நிலைமை வந்தது. “தூறல் நின்னு போச்சு” படத்தில் ஹீரோயினாக முயற்சிக்கும்போது, மேக்கப் டெஸ்ட்டை பார்த்துவிட்டு, பாக்யராஜ் ஓகே சொல்லலையாம்.. இதனால் மனம் உடைந்த பானுப்பிரியா, தூறல் நின்னு போச்சு படத்தில் நான்தான் ஹீரோயின் என்று எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். அந்த படம் ரிலீஸ் ஆகும்வரை வெளியே தலைகாட்ட மாட்டேன். டான்ஸ் கிளாஸ் போக மாட்டேன் என்று தன் அம்மாவிடம் அடம் பிடித்துள்ளார்.
பிறகுதான், “மெல்லப் பேசுங்கள்” படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பணம் தோல்வி அடைந்தது. அந்த படத்தில் சம்பளம் இல்ல, உழைப்பையும் கொட்டி வீணாகிவிட்டது. அந்த படம் நடித்து 6 மாத காலம் ஆகியும் முன்னேற்றம் இல்லை. இதனால், சான்ஸ் கேட்டு மீண்டும் ஆந்திராவுக்கே போயிட்டாங்க. அதற்கு பிறகுதான், தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. கண்ணழகி என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள். நல்ல உயரம், தன்னுடைய பார்வையால், நடையால், ரசிகர்களை இழுத்தார்.
“தளபதி” படத்தில் விதவை கதாபாத்திரத்துக்கு வசனத்தைவிட, முகபாவனைதான் முக்கியம். இந்த முகபாவனைகளை பானுப்பிரியாவை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று நம்பி ரஜினி, மம்முட்டி, மணிரத்னம் என 3 பேருமே பானுப்பிரியாவின் கால்ஷீட்டுக்காக காத்துக் கிடந்தனர். கடைசியில் தளபதி படம், மிகப்பெரிய இடத்தை பானுப்பிரியாவுக்கு பெற்றுக் கொடுத்தது. ஆனால், பணத்தை பாதுகாக்க தெரியாமல், குடும்பத்தினரின் ஊதாரித்தனமாக செலவுகளுக்கு தானும் பலியாகி, குடியிருக்க வீடும் இல்லாமல், ஏவிஎம் ஸ்டுடியோ வராண்டாவில் காத்திருக்கும் நிலைமை வந்தது. பிறகு ஏவிஎம்மில் பானுப்பிரியாவுக்கு அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அங்குதான் நீண்ட காலம் தங்கியிருந்தார் பானுப்பிரியா.
கணவர் உயிரிழந்த நிலையில், குடும்பத்தினரின் தொடர்பும் இல்லாமல், சொத்துக்களும் கையை விட்டு போய், வறுமை கோட்டுக்கு கீழே நிலைமை வந்துவிட்டது. பிறகுதான, செல்லமே, பொல்லாதவன் என படங்களில் நடித்தார். சொந்த படம், ரியல் எஸ்டேட், தம்பியை ஹீரோவாக வைத்து படம் எடுத்து, மொத்த சொத்துக்களும் போய்விட்டது. கடைசியில் நினைவாற்றலும் போய்விட்டது. இதனால் டயலாக் பேச முடியாமல் அவமானப்பட்டார்.
ஒருமுறை பானுப்ரியா சொன்னார், “என்னை போல யாரும் ஊதாரியா வாழாதீங்க.. இப்போது என்னுடைய கண் பார்வை சரியா இல்லை.. காது சரியா கேக்கல.. உடல் பருத்து போயிருச்சு.. இதெல்லாம் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட சில தீய பழக்கங்களால் வந்தவை. இதனால் என் சொத்தை இழந்தேன். இளைய தலைமுறைகள், என்னை முன்மாதிரியாக வைத்து கொள்ள வேண்டும். உங்கள் சொத்துக்களை எக்காலத்திலும் யாரிடமும் இழக்கக்கூடாது. இதுக்கு நான்தான் ஒரு உதாரணம்” என்று கூறியதாக தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
Read More : நீங்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரூ.35,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!