தற்போது உள்ள காலகட்டத்தில், சினிமா உலகத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகவும், சாதாரணமாகவும் மாறி விட்டது. இதற்க்கு பயந்தே பல பெண்கள் சினிமாவில் நடிக்க பயப்பிடுகிறார்கள் என்று சொல்லலாம். இப்படி தங்களுக்கு நடந்த கொடுமைகளை சிலர் வெளியே சொன்னாலும், பலர் வெளியே இது குறித்து பேசுவது இல்லை. அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த வன்கொடுமை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சென்னையைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை சர்மிளா, இவர் தன்னை சூட்டிங்கின் போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.
மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சர்மிளா. இவர் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “காலம் மாறிப்போச்சு என்னும் தமிழ்ப்படத்தின் ரீமேக்கான அர்ஜூனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் படத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படத்தில் நடிக்கும் போது ஆரம்பத்தில் என்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி எதுவும் கேட்கவில்லை. கடைசி மூன்று நாட்கள், ஒரு பாடலின் கட்சிக்காக பொள்ளாச்சிக்கு படக்குழுவுடன் சென்றிருந்தேன். அங்கு வழக்கம் போல், படம் முடிந்து போகும் போது இயக்குநர்கிட்டேயும், தயாரிப்பாளர்கள்கிட்டேயும் சொல்ல நான் சென்றேன். ஆனால் அங்கு தயாரிப்பாளரும் அவருடன் இருந்த 8 பேரும் சேர்ந்து என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.
அது பொள்ளாச்சி என்பதால், நான் வெளியே ஓடிப்போய் ஆட்டோல அப்பாவின் நண்பர்கள் வீட்டுக்கு போனேன். என் அப்பாவின் நண்பர்கள் ஆதிக்கல் ராஜ் எம்.பி, கிருபாகரன் ஆகியோர் அப்போது பொள்ளாச்சியில் இருந்தாங்க. அப்போது எல்லாம் போன் வசதி கிடையாது. பிறகு, எஸ்.டி.டி கால் புக் செய்து அப்பாகிட்ட போனில் பேசி, அதன்பின், அப்பா வந்து ராஜாத்தி அம்மாள் கிட்ட சொல்லி, அவங்களை ஜெயிலில் போட்டோம்.” என்று கூறியுள்ளார்.