காமெடி என்ற உடன் நமது நினைவிற்கு முதலில் வருவது வடிவேலு. அற்புதமான நடிப்பு கலைஞனான இவரை, காமெடி டாக்டர் என்று கூட சிலர் புகழ்வது உண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் தான் வடிவேலு. எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில்தான் வடிவேலு முறையாக நடிகனாக அறிமுகமானார்.
படம் வெற்றிபெறவே ராஜ்கிரணும் வடிவேலுவும் இணைந்து, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பொன்னு விளையுற பூமி’ என பல படங்களில் நடித்தனர். என்னதான் இவர் ரசிகர்களுக்கு பிரியமான நடிகராக இருந்தாலும், இவருடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு இவர் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆம், அவருடைய குழுவில் இருந்த பல நடிகர்கள் வடிவேலு அட்ஜஸ்ட்மென்ட் டீல் பேசி தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு தொல்லை கொடுப்பார் என்று கூறி இருந்தார்கள்.
இந்த குற்றச்சாட்டு உண்மை தான் என்று நிரூபிக்கும் விதமாக, இவருடன் நடித்த ஒரு சில நடிகைகள் பேட்டிகளில் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில், கவர்ச்சி நடிகைகளில் ஒருவர், வடிவேலுவின் மனைவியாக டாப் ஹீரோ ஒருவரின் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அவர் கூறும் போது, அந்தப் படத்தில் நடித்த பிறகு, எனக்கு கிட்டத்தட்ட 16 தடவை வடிவேலுவுடன் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால், நான் காசு இல்லாமல் பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர, வடிவேலுவுடன் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இதையடுத்து, இதற்கு என்ன காரணம் என்று தொகுப்பாளர் கேட்டபோது, அந்த நடிகை எந்த பதிலும் சொல்லவில்லை. மேலும், வடிவேலுவை பற்றி பேசுவது பிரயோஜனம் இல்லாத ஒன்று என்று முடித்திருக்கிறார். இவரது இந்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.