fbpx

’நடிகைகளை ஒரு போதையாகவே பார்க்கின்றனர்’..!! புது குண்டை தூக்கிப் போட்ட சேரன் பட நடிகை..!!

‘மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது’ என்று பிரபல நடிகை பத்மபிரியா விமர்சித்துள்ளார்.

மலையாள நடிகர்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பெரும் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கும் நிலையில், முன்னணி நடிகை பத்மபிரியா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி திரையுலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஹேமா கமிட்டி அறிக்கை ஏன் 4 ஆண்டுகள் தாமதமாக வெளியிடப்பட்டது என அரசு விளக்கம் தர வேண்டும். நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது.

எதுவுமே தெரியாதது போல் பேசும் மோகன்லால், மம்முட்டி ஆகிய இருவரின் கருத்துகள் எனக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றன. போதை மலையாள திரையுலகில் அதிகார மையம் என்று ஒன்று இருக்கிறது. அதிகாரம் இருப்பதால் தான் அவர்கள் நடவடிக்கைகள் இவ்வாறு உள்ளது. நடிகைகளை ஒரு போதையாகவே பார்க்கின்றனர். எனக்கு இப்போது அதிக படங்கள் கையில் இல்லை, வாய்ப்புகள் குறைந்துவிட்டன.

அதற்கு என்ன காரணமென்று எனக்கு நன்றாக தெரியும். 26 வயதில் நான் இருக்கும்போது, ‘உங்களுக்கு வயதாகிவிட்டது, நடிப்பதை நிறுத்துங்கள்’ என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூறினார். அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியாக இருந்தது” என்று பத்மபிரியா கூறியுள்ளார். அவர் தமிழில், சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் படங்களிலும், ‘சத்தம் போடாதே’ படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

Read More : டெபாசிட் செய்யும் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கணுமா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Famous actress Padmapriya has criticized that ‘Malayalam Actors’ Association has no backbone’.

Chella

Next Post

Work From Home.. லட்சத்தில் சம்பளம்..!! டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க?

Wed Sep 4 , 2024
A new job notification has been released from a famous IT company. Candidates can work from home.

You May Like