fbpx

விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்பு செட்டுகள்‌ அமைக்க கூடுதலாக 20 சதவீத மானியம்…! உடனே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்…!

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசு வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ முதலமைச்சரின்‌ சூரிய சக்தி பம்பு செட்டுகள்‌ திட்டத்தின்‌ கீழ்‌ மின்‌ இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 திறன்‌ வரையிலான மின்கட்டமைப்புடன்‌ சாராத தனித்து சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகள்‌ 70 சதவீத மானியத்தில்‌ அமைக்கும்‌ திட்டம்‌ ( 40 சதவீதம்‌ தமிழக அரசின்‌ மானியம்‌ மற்றும்‌ 30 சதவீதம்‌ ஒன்றிய அரசின்‌ மானியம்‌ ) 2021-2022 ஆம்‌ ஆண்டு முதல்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ முதல்‌ தவணையாக 22 சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகள்‌ ரூ.51.06 இலட்சம்‌ மானியத்தில்‌ அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதியதாக ஏற்படுத்தப்படும்‌ பாசனத்திற்கான கிணறுகள்‌ நிலநீர்‌ பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. இதர பகுதிகளில்‌ ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில்‌ மசல்‌ என்ஜீன்‌ பயன்படுத்தி வரும்‌ பட்சத்தில்‌ அதற்கு மாற்றாக இத்திட்டத்தின்‌ கீழ்‌ சரிய சக்தியால்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகளை அமைத்துக்‌ கொள்ளலாம்‌. தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்தின்‌ மூலம்‌ இலவச மின்‌ இணைப்பு கோரி தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றம்‌ பகிர்மான கழகத்தில்‌ பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு மானியம் | Solar Pump Subsidy In  Tamilnadu 2020

மேலும்‌ பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும்‌ பொருட்டு, இத்திட்டத்தின்‌ கீழ்‌ சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகளை அமைத்திட, வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறை உபகோட்டங்களில்‌ விண்ணப்பம்‌ அளிக்கும்‌ போது சூரிய சக்தியால்‌ பங்கும்‌ பம்பு செட்டுகளை நுண்ணீர்பாசன அமைப்புடன்‌ இணைத்திட உறுதி மொழி அளித்திட வேண்டும்‌.

வேளாண்‌ பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும்‌ நீர்‌ நிலைகளில்‌ இருந்து 200 மீட்டருக்குள்‌, கான்கீரிட்‌ காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள்‌, நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட தொலைவிற்குள்‌ நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால்‌ பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச்‌ சான்று பெற வேண்டும்‌. மேற்படி தொலைவு வரம்பிற்குள்‌ உள்ள நீர்‌ ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும்‌ பொழுது பொதுப்பணித்துறையின்‌ தடையில்லா சான்றினை இணைத்திட வேண்டும்‌.

New Solar Pump Sets to Farmers in Andhra Pradesh

மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் கீழ்காணும் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

Also Read: #Tax: “சூப்பர் நியூஸ்” இனி நீங்க சொத்துவரி கட்ட அலைய வேண்டாம்…! மொபைல் மூலம் ஆன்லைனில் நீங்களே செலுத்தலாம்…!

Vignesh

Next Post

சக மாணவிகள் ராகிங் செய்ததால் கல்லூரி மாணவி விபரீத முடிவு..! கடிதம் சிக்கியதால் பரபரப்பு..!

Sun Jul 3 , 2022
சக மாணவிகள் ராகிங் செய்ததால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி, கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொள்ளும் […]

You May Like