லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட அகவிலைப்படி (DA ) உயர்வு அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அகவிலைப்படி குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.. அதன்படி, இந்த மாதத்தில் நிலையில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5% அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் மற்றொரு புத்ய தகவல் வெளியாகி உள்ளது.. அதாவது, அகவிலைப்படி உயர்வு மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது..
மே மாதத்திற்கான DA மற்றும் Dearness Relief (DR) உயர்வுகளுக்கான எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.. எனவே அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6% உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி. 6 சதவீதம் உயர்த்தப்பட்டால், 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 40 சதவீதமாக உயரும். இந்த அறிவிப்பு ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை..