இத்தாலி நாட்டை சேர்ந்த எலெனா கார்னாரோ பிஸ்கோபியா என்பவர் 1678 ஆம் ஆண்டில் பிஹெச்டி பெற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இத்தாலி நாட்டின் வெனிஸ் என்ற இடத்தில் 1646 ஆண்டு ஜூன் 5ஆம் தேதி எலெனா கார்னாரோ பிஸ்கோபியா பிறந்தார். அன்றைய காலகட்டத்தில் பெண்கள் என்றாலே அவர்கள் அடுப்பங்கரை உள்ளிட்ட வீட்டு வேலை செய்வதற்கு மட்டும் தான் என்று முடக்கப்பட்ட நிலை இருந்தது. ஆனால் எலெனா கார்னாரோ பிஸ்கோபியா, வசதி உடைய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததால், கல்வி கற்க இவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். இவர் தனது ஏழு வயதிலேயே லத்தின் மற்றும் கிரிகை கற்க ஆரம்பித்தார் .அதில் நன்கு கை தேர்ந்தப் பிறகு ஹீப்ரு. ஸ்பானிஷ், பிரெஞ்சு, அரபிக், மற்றும் இத்தாலிய மொழி என அனைத்தையும் கற்றுக்கொண்டார். இத்தோடு நில்லாமல் இவர் இசைக் கருவிகளையும் இசைக்கக் கற்றுக் கொண்டார். பெனடிசார்ப்சிகார்ட், கிளாவிச்சார்ட், வீணை மற்றும் வயலின்டின் ஓப்லேட் போன்ற இசைக்கருவிகளை இசைப்பதில் கைதேர்ந்தவர்.
இதனை தொடர்ந்து, 1678 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்ததன் மூலம் உலகின் முதல் பிஎச்டி (phd) பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை எலெனா கார்னாரோ பெற்றார். இவர் இலக்கணம் கணிதம் அறிவியல் விண்ணியல் தத்துவவியல் இறையியல் என அனைத்தையும் கற்றுக் கொண்டார். தத்துவவியலில் தனது முதல் பி.ஹெச்.டி பட்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 370 வருடத்திற்கு முன்னர் பி.ஹெச்.டி பெற்ற முதல் பெண் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இத்தகைய திறமையை கொண்ட எலெனா கார்னாரோ, திருமணம் செய்து கொள்ளவில்லை. பின்பு காசநோயால் பாதிப்படைந்த இவர், ஏழை எளிய மக்களுக்கு கல்வி கற்க உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.