துருக்கி நிலநடுக்கத்தை கணித்த ஆராய்ச்சியாளர், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என கூறியுள்ளார்.
துருக்கி, சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே அதனை கணித்த நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் 3ஆம் தேதி 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், கடந்த திங்கட்கிழமை அதிகாலை, துருக்கி-சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, இரு நாடுகளிலும் 15,000க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டது. சிரியா மற்றும் துருக்கியில் இதுவரை 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
துருக்கியில் வீடுகள், கட்டிடங்கள், இடிந்து விழுந்து மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இடிபாடுகளில் தப்பியவர்களை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்றும், ஆப்கானிஸ்தானில் இருந்து நிலநடுக்கம் தொடங்கி இந்தியா வழியாக சென்று இந்தியப் பெருங்கடலில் முடியும் என்றும் பிராங்க் ஹூகர்பீட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இப்பகுதியில் நிலப்பரப்பு கரடுமுரடானது மற்றும் இந்த கணிப்புகள் தோராயமானவை. அனைத்து நிலநடுக்கங்களும் பெரிய சேதத்தை ஏற்படுத்துமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. இயற்கை ஒருபோதும் தன்னை முன்கூட்டியே அறிமுகப்படுத்துவதில்லை என்று அவர் கூறினார்.