fbpx

ஆக்ரோஷமான சிங்கம்… தேசிய சின்னத்தை, பாஜக அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்துவைத்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் தேசியச் சின்னம் போடப்பட்டதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.. புது பாராளுமன்ற கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சிங்கம் மிகவும் ஆக்கிரோஷம் ஆக இருக்கிறது என்றும், பாஜகவினர் நமது தேசிய சின்னத்தை அவமதித்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.. ஆனால் இந்த சின்னம் சாரநாத் தூணில் உள்ள சின்னத்தின் சரியான பிரதிபலிப்பு என்று கூறி பாஜக பதிலடி கொடுத்துள்ளது. மேலும் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே ஒரு சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளது.

ஆனால் மறுபுறம், அந்த சிங்கத்தை வடிவமைத்த சிற்பி சுனில் தியோர், சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட புகைப்படங்கள் கீழே இருந்து எடுக்கப்பட்டதால், சிங்கம் ஆக்ரோஷமாக இருப்பது போல தெரிவதாக தெரிவித்துள்ளார்.. திரிணாமூல் கட்சி எம்பிக்கள் ஜவ்ஹர் சிர்கார் மற்றும் மஹுவா மொய்த்ரா ஆகியோர் தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்களின் வெளிப்பாடுகள் மற்றும் விகிதாச்சாரங்கள் குறித்து மத்திய அரசை விமர்சித்தனர்..

ட்விட்டரில் 2 படங்களையும் பகிர்ந்துள்ள ஜவ்ஹர் சிர்கார் “நமது தேசிய சின்னமான கம்பீரமான அசோகன் சிங்கங்களுக்கு அவமானம். இடதுப்புறம் உண்மையான புகைப்படத்தில் சிங்கம் அழகாகவும், நம்பிக்கையுடன் உள்ளது. வலதுபுறத்தில் இருப்பது மோடியின் பதிப்பு, புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு மேலே உள்ளது.. இந்த சிங்கம் உறுமுகிறது, ஆக்ரோஷமாக உள்ளது மற்றும் விகிதாசாரமற்றது,” என்று குறிப்பிட்டுள்ளார்..

இதற்கிடையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் கிர் காட்டில் காணப்படும் சிங்கங்களின் “சிதைக்கப்பட்ட வடிவமா” என்று காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.. இதே போல் ஆம் ஆத்மி கட்சியும் கண்டம் தெரிவித்துள்ளது..

இதையடுத்து விமர்சனங்களுக்கு பதிலளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ஒருவர் கீழே இருந்து சாரநாத் சின்னத்தைப் பார்த்தால், அது விவாதிக்கப்படுவதைப் போல அமைதியாகவோ அல்லது கோபமாகவோ தோன்றும்,” என்று கூறினார். அசல் சாரநாத் சின்னம் 1.6 மீட்டர் உயரம் கொண்டது, அதே சமயம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் உள்ள சின்னம் 6.5 மீட்டர் உயரத்தில் மிகப்பெரியது,” என்று அவர் மேலும் கூறினார்..

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் உள்ள சின்னம் அசோகாவின் சாரநாத் தூணில் உள்ள சிங்கத்தின் தழுவல் என்று கூறினார். இதே போல் புதிய சிலைக்கும், சாரநாத்தில் உள்ள பழங்கால சிற்பமான அசோக தூணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என, சிற்பி சுனில் தியோர் கூறினார். “அசல் அமைப்பு 3 முதல் 3.5 அடி உயரம், ஆனால் புதியது 21.3 அடி உயரம். சிங்கங்களின் சரியான பிரதியை உருவாக்குவது எனது சுருக்கம். திட்டத்தை முடிக்க ஒன்பது மாதங்கள் ஆனது,” என்று அவர் கூறினார்.

அந்த சிங்கம் கிட்டத்தட்ட 9,500 கிலோ எடையுடையதாகவும், இறுதிக்கட்டப் பணிகள் அந்த இடத்திலேயே முடிந்துவிட்டதால், கட்டமைப்பு பகுதிகளாக முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்…

Maha

Next Post

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Wed Jul 13 , 2022
இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Chief Risk Officer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Chief Risk Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 57 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு Public Sector Banks, பணிகளில் குறைந்தது 5 […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like