fbpx

அக்னிபாத் வன்முறை..! ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய 2,600 பேர் கைது..! மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்..!

’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன. ரயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், ரயில்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை? இழப்பு ஏற்பட்ட ரயில்வே சொத்தின் மதிப்பு மற்றும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா? என மக்களவையில் உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

அக்னிபாத் வன்முறை..! ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய 2,600 பேர் கைது..! மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்..!

இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்னக ரயில்வே என ரயில்வேயில் உள்ள 12 மண்டலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியதாக 2,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக தென்னக ரயில்வேயில் மட்டும் 1,051 பேர் கைது செய்யப்பட்டுள்னர். கிழக்கு ரயில்வே மற்றும் தெற்கு மத்திய மண்டல ரயில்வேயில் தலா ஒருவர் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்து உள்ளதாகவும், அதேபோல் கிழக்கு ரயில்வேயில் 14 பேரும், தெற்கு மத்திய மண்டல ரயில்வேயில் 21 பேர் காயம் அடைந்தனர்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

இலங்கையில் பதற்றம்.. புதிய அதிபரான ரணில் விக்ரமசிங்கே... மீண்டும் அதிபர் செயலகம் முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்..!

Wed Jul 20 , 2022
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார். சிங்கப்பூரிலிருந்தே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் 20-ஆம் தேதியான இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா […]

You May Like