fbpx

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு..! மொத்தம் 49 இடங்களில் சோதனை..!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 49 இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு - Polimer News - Tamil  News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அப்போது அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா..! விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு..?

Fri Jul 8 , 2022
தேனியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 12 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 170 மாணவர்கள் […]

You May Like