அதிமுக பொதுக்குழு நாளான்றே எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வர இருப்பதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தாம் பொறுப்பு வகித்து வந்த நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் டெண்டர்களை முறைகேடாக தமது சம்பந்தி மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுக ஆட்சியில் ரூ.3,120 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கிய புகார் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமது பதவியை முறைகேடாக பயன்படுத்தி அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ. 3120 கோடி டெண்டர்களை தனது சம்பந்திக்கு கொடுத்தாக திமுக சார்பில் வழக்கு தொடரபட்டது. தாம் பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரம் கோடிக்கு டெண்டர்களை தமது சம்பந்திக்கும், சம்பந்தி ஒப்பந்ததாரராக இருக்கும் நிறுவனங்களுக்கும் அளித்தது தொடர்பாக அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதியன்று லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதனை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் அறிக்கை செய்தது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை சரிவர விசாரிக்கவில்லை என்றும் எனவே, சிபிஐ விசாரணை தேவை என்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதடியது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நாளில், இந்த வழக்கு விசாரணைக்கு வருவதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.