எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் அப்டேட் கேட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள், இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கையில் துப்பாக்கியுடன் அஜித் இருக்கும் துணிவு படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மேலும் படத்தின் “சில்லா சில்லா” பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் அந்த பாடலை அனிருத் தான் பாடி இருக்கிறார்.

இந்நிலையில் சில்லா சில்லா பாடல் தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தி இருக்கிறது. “என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு.. மனசுல போராட துணிவிருக்கு” என வரிகள் வரும் 10sec பகுதி லீக் ஆகி தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடல் கேட்பதற்கு செம்ம மாஸாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.