fbpx

அதிரடி…! 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை கிடையாது…! அமைச்சர் தகவல்…!

தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தினால்‌ 101 இடங்களில்‌ வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள்‌ செயல்பட்டு வருகிறது. இந்த சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ விற்பனை விலையை விட கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும்‌ புகார்களை தடுக்கும்‌ வகையில்‌ நான்கு மதுபான சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ நிறுவ நடவடிக்கையில்‌ உள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம்‌ மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படும்‌ போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌, வணிகவளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது.

மேலும்‌ தானியங்கி மதுபானவிற்பனை இயந்திரம்‌ மூலம்‌ செய்யப்படும்‌ அனைத்து விற்பனைகளும்‌ கடை பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள்‌ மற்றும்‌ விற்பனையாளர்களின்‌ முன்னிலையிலேயே நடைபெறும்‌ வகையில்‌ நிறுவப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம்‌ கடை பணியாளர்களின்‌ முன்னிலையில்‌ கடைகளின்‌ உள்ளேயே மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படுவதால்‌ 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படமாட்டாது. தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தினை கடைகளின்‌ பணி நேரமான நண்பகல்‌ 12.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை Mall Shops திறந்திருக்கும்‌ நேரத்தில்‌ மட்டுமே பயன்படுத்த முடியும்‌. இவ்வியந்திரம்‌ கடைக்கு உள்ளேயே நிறுவப்பட்டுள்ளதால்‌ மதுபானம்‌ நுகர்வோர்‌ தவிர மற்ற பொதுமக்களால்‌ அணுக முடியாது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாணவர்களுக்கு வரும் மே 1 முதல் 15-ம் தேதி வரை கோடை பயிற்சி...! ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு...!

Sat Apr 29 , 2023
கோடைகால விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌, தருமபுரி பிரிவுசார்பாக 01.05.2023 முதல்‌ 15.05.2023 வரை மாவட்ட விளையாட்டரங்கம்‌, தருமபுரியில்‌ தடகளம்‌, கால்பந்து, ஹாக்கி, வாலிபால்‌ ஆகிய விளையாட்டுக்களில்‌ கோடைகால பயிற்சி முகாம்‌ நடைபெறவுள்ளது. பயிற்சி முகாம்‌ காலை 6.30 மணி முதல்‌ 8.30 மணி வரையிலும்‌,மாலை 4.30 மணி முதல்‌ 6.30 வரையிலும்‌ நடைபெறும்‌. […]

You May Like