fbpx

துடிக்க துடிக்க தாய்க்கு நேர்ந்த கொடூரம்.! கண்ணை மறைத்த மது போதை.! மகன் வெறி செயல்.!

தென்காசி மாவட்டத்தில் தாய் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் கொலையாளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமுத்து இவரது மனைவி ராமலட்சுமி(65). இவர்களது மகனான சங்கரநாராயணன்(43) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று குடிப்பதற்காக பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்துள்ளார்.

மகனுக்கு பணம் தர ராமலட்சுமி மறுத்ததால் ஆத்திரமடைந்த சங்கரநாராயணன் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து தாயின் மீது ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார். இதில் துடிதுடித்த ராம லட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கருகிய ராமலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளியான மகன் சங்கரநாராயணனை கைது செய்துள்ளனர். மது வெறியால் தாய் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

திக் திக் சம்பவம்.! டையாப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்ட 17 தோட்டாக்கள்.! தீவிரவாத சதியா.! ஏர்போர்ட்டில் பரபரப்பு.!

Sun Dec 24 , 2023
விமான நிலையத்தில் குழந்தைகள் அணியும் டையாப்பருக்குள் துப்பாக்கி குண்டுகள் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பயணியிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் சிகாகோ செல்ல இருக்கும் பயணிகளுக்கான பரிசோதனை நடந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் கைப்பையை பரிசோதனை செய்தபோது குழந்தைகள் அணியும் டையாப்பரில் 17 துப்பாக்கி குண்டுகள் மறைத்து […]

You May Like