fbpx

தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

ஈரோடு, சேலம், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

மேலும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழை

வரும் 14ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வெள்ளி நகைகளை திருடுவதற்காக 108 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொள்ளையர்கள் வெறிச்செயல்..!!

Mon Oct 10 , 2022
ஜெய்ப்பூரில் 108 வயது மூதாட்டி ஒருவரின் வெள்ளி மோதிரங்களைத் திருட கொள்ளையர்கள் அவரது கால்களை வெட்டிச் சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 108 வயது மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில், வசித்து வந்தார். இந்நிலையில், அந்த மூதாட்டியின் கால், கொள்ளையர்களால் வெட்டப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் கூறுகையில், ”மூதாட்டி காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக, […]
வெள்ளி நகைகளை திருடுவதற்காக 108 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொள்ளையர்கள் வெறிச்செயல்..!!

You May Like