அமெரிக்காவில் தீ விபத்து குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்து 6 பேரின் உயிரை அலெக்சா கருவி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் வசித்து வந்தனர். நள்ளிரவில் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். 2 மணி அளவில் வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் யாரும் கவனிக்கவில்லை என கூறப்படுகின்றது. வீட்டை சூழ்ந்து எரிந்துகொண்டிருந்த தீ காரணமாக வீட்டிற்குள்ளும் புகை மூட்டமானது.
புகை பரவ தொடங்குமுன்பு அவர்கள் வீட்டில் இருந்த அமேசானின் பிரத்யேக கருவி அலெக்சா உணர்நதுள்ளது. உடனடியாக ஒலி எழுப்பி அனைவரும் கேட்கும் விதமாக சத்தமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தூக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து புகை மண்டலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து அவசரமாக வெளியேறினர்.
வீட்டைச் சூழ்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் குடும்பத்தின் கேரேஜ் வழியாக வெளியே சென்ற நிலையில் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு மீட்புத்துறையினர் அலெக்சாவால் உயிர்கள் காப்பாற்றப்பட்டது என டுவிட்டரில்தகவலை பகிர்ந்தனர். உரிய நேரத்தில் எச்சரிக்கை அளித்து வெளியேற்றப்பட்ட சம்பவம்ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.