fbpx

‘நாளை முதல் அனைத்து டீசல் பேருந்துகளுக்கும் தடை’..!! மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில், நாளை முதல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து டீசல் பேருந்துகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அதற்கு முன்பாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இதனால் குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கடந்தாண்டு அக்.29ஆம் தேதி 397 ஆக இருந்த காற்று தரக்குறியீடு தற்போது 325 ஆக குறைந்துள்ளது.

இதனை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். டெல்லியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மாசுக்களை ஏற்படுத்தும் எரிபொருட்களில் இருந்து இயற்கை எரிவாயுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிவப்பு சிக்னலின் போது, வாகனங்களின் எஞ்சினை அணைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாளை முதல் வெளி மாநிலங்களில் டீசலில் இயங்கும் பேருந்துகள், டெல்லி – ஏசிஆர் பகுதியில் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் மாற்று எரிபொருளை பயன்படுத்த அறிவுறுத்தப்படும் என்றும் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தர்.

Chella

Next Post

"மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" உங்களுக்கு இந்த குறுஞ்செய்தி வந்ததா..! உடனே இதை செய்யுங்க…

Tue Oct 31 , 2023
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனம் தேவை என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிறைய இடங்களில் ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து இது போல போலி குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இதுபோன்ற போலி குறுஞ்செய்தி யாருக்கேனும் வாந்தால் இந்த விதிமுறைகளை பின்பற்றி […]

You May Like