fbpx

30 வயகுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு.. வரும் 22-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்… அசத்தல் அறிவிப்பு…

வரும் 22-ம் தேதி சென்னையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது..

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்‌நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மைய அலுவலகங்களிலும்‌, இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ வேலைவாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்படுகிறது.. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்புகள்‌ பெற்று
வழங்கப்பட்டு வருகிறது. இதன்‌ மூலம்‌ இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ ஆயிரக்கணக்கான இளைஞர்கள்‌ தனியார்‌ துறையில்‌ பணி நியமனம்‌ பெற்று வருகின்றனர்‌.

அந்த வகையில் சென்னையில்‌ உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ அலுவலகங்களும்‌ இணைந்து 22.07.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம்‌ ஆலந்தூர்‌ சாலையில்‌ உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ அமைந்துள்ள தொழிசார்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ காலை 10.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை நடைபெற உள்ளது..

இம்முகாமில்‌ 30 வயதிற்கு உட்பட்ட 8- ஆம்‌ வகுப்பு, 10- ஆம்‌ வகுப்பு, 12- ஆம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப பிரிவில்‌ ஏதாவது ஒரு பட்டம்‌ (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும்‌ கலந்து கொள்ளலாம்‌. இம்முகாமில்‌ 20-க்கும்‌ மேற்பட்ட தனியார்‌ துறை நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்‌. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

மருத்துவமனை சென்றவுடன் டாக்டர் ஏன் முதலில் உங்க நாக்கை பார்க்கிறார் தெரியுமா...? அதன் காரணம் இது தான்...

Tue Jul 19 , 2022
வலுவான பற்கள் மற்றும் ஈறுகளைப் பராமரிப்பது போலவே ஆரோக்கியமான நாக்கைப் பராமரிப்பதும் முக்கியம். நாக்கில் தேங்குவது துர்நாற்றம், பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் அறிகுறியாகும். நாக்கு வலி, கொட்டுதல், எரிதல், வீக்கம் அல்லது உணர்வின்மை போன்ற எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்கும். இது ஈரமானது, கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் வெளிர் சிவப்பு மேலோட்டத்துடன் சம நிற இளஞ்சிவப்பு மேற்பரப்பு உள்ளது. நாம் நமது நாக்கை கவனமாகக் […]

You May Like