fbpx

“குட் நியூஸ்” ஓய்வூதியம் பெரும் நபர்கள் ஆயுள் சான்றிதழை அனைவரும் வீட்டில் இருந்தே சமர்பிக்கலாம்…! அஞ்சல்துறை தலைவர் அறிவிப்பு…!

சென்னை மாநாகராட்சி மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், 01 ஜூலை 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை தபால்காரர் மூலம், சென்னை மாநாகராட்சி ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைத் தங்கள் வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிப்பதிலிருந்து  பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியம் பெறுவோர், வருகிற ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேரில் சென்று ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.  இதற்கு சேவை கட்டணமாக, தபால்காரரிடம் ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் அவர்கள் தெரிவித்துள்ளா

Also Read: Monkey pox: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி…! தடுக்க ஒரே வழி இதை கடைபிக்க வேண்டும்….!

Vignesh

Next Post

அடி தூள்... பட்டய படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை..! உடனே விண்ணப்பிக்க வேண்டும்...!

Sat Jul 16 , 2022
மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தால், சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு நடத்தப்பட்டு வரும், மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தி வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், நுழைவுத் தேர்வு ஏதுமின்றி, நேரடி சேர்க்கை மூலம் 3 ஆண்டுகால பட்டய படிப்பை (DPMT/DPT) படிக்கலாம். இதேபோன்று, கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 2 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பில் […]
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு..! இன்றே கடைசி நாள்..! உடனே இதை செய்து விடுங்கள்..!

You May Like