fbpx

’எல்லா கோரிக்கையும் நிறைவேற்றியாச்சு’..!! ’95% பேருந்துகள் இயக்கம்’..!! அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு தகவல்..!!

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பல மாவட்டங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசியல் காரணங்களுக்காக போக்குவரத்து ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்துவது திசை திருப்புகின்ற செயல். குறிப்பாக இதற்கெல்லாம் யார் காரணமோ அந்த எடப்பாடி பழனிசாமி அணியோடு, அதிமுக தொழிற்சங்கத்தோடு சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தம் செய்வது மிகுந்த கவலைக்குரியது, கண்டனத்திற்குரியது. கடந்த 10 ஆண்டு காலத்தில் திமுக தொழிற்சங்கமான தொமுச மற்ற சங்கங்களுடன் துணை நின்று கோரிக்கைகளுக்காக போராடியது.

இன்றைக்கு உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்று தொமுச சொல்லியிருக்கிறது. அதற்கான நேர அவகாசம் தான் கேட்கிறோம். இது பொங்கல் நேரம். மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நேரம். சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு போராட்டம் என்பது பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியது.

நீங்கள் வைத்த கோரிக்கையை எல்லாம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். நீங்கள் சொன்ன 6 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றத்தான், கால அவகாசம் கேட்கிறோம். இன்றைக்கு போக்குவரத்து சுமூகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் இடைஞ்சல் செய்ய வேண்டாம். 95 சதவீதத்துக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. முதல்வர் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாதபடி போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

Chella

Next Post

யூரி ராணுவ முகாம் தாக்குதல்: அரண்டு போன பாகிஸ்தான்.!ஐஎஸ்ஐ' தொடர்பை நிரூபித்த அமெரிக்கா.!

Tue Jan 9 , 2024
2016 ஆம் ஆண்டு இந்தியாவின் யூரி ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு இருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் அமெரிக்கா கேள்வி எழுப்பியதாக இந்தியாவின் முன்னாள் தூதர் தெரிவித்திருக்கிறார். 2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐஎஸ்ஐ […]

You May Like