கொரோனா தொற்றுநோய் (கோவிட் -19) காலத்தில், மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசாங்கம் தொடங்கியது, அது இப்போது செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாத பலர் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்த மக்கள் தங்கள் அட்டைகளை ஒப்படைக்குமாறு உத்தரப்பிரதேச அரசாங்கம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. பல ரேஷன் கார்டுதாரர்கள் தகுதியில்லாமல் இருப்பதுடன், அவர்களும் இலவச ரேஷனை பயன்படுத்தி வருவதும், இதனால் தகுதியான பல கார்டுதாரர்கள் பயன் பெறாமல் இருப்பதும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ரேஷன் கார்டுகளுக்கான தகுதி வரம்புகள் மற்றும் சரண்டர் விதிகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி 8 லட்சம் தகுதியற்ற கார்டுகளை அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அம்மாநிலத்தில் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதியில்லாத பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்குமாறு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்திற்கான ரேஷன் கார்டு தகுதி விதிகள்: கார்டுதாரர் உத்தரபிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.. குடும்பத் தலைவர் தகுதி பெற 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும்.. இருப்பினும், குடும்பத்தலைவர் ஆணாக இருந்தால், தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், குடும்ப மாத வருமானம் ரூ.15,000க்கு மிகாமல் இருந்தால், குடும்பம் மலிவு அல்லது இலவச ரேஷனின் பலன்களை அனுபவிக்க முடியும். மேலும், குடும்பத்தின் மாத வருமானம் ரூ.15,000க்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும், குடும்பம் 2 ஹெக்டேருக்கும் குறைவான நீர்ப்பாசன நிலத்தை வைத்திருந்தால், லிவு விலையில் அல்லது இலவச ரேஷன் பெறத் தகுதி பெறலாம்..
ரேஷன் கார்டை யார் ஒப்படைக்க வேண்டும்?
- நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள் – கார் முதல் டிராக்டர் வரை – ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும்.
- ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கிராமப்புறம் அல்லது நகர்ப்புறங்களில் 100 சதுர மீட்டர் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
- அரசு ஊழியர்களும் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும்.
- வருமான வரி வரம்புக்குள் வரும் நபர்களும் அட்டையை ஒப்படைக்க வேண்டும்.
- வீடுகளில் ஏசி மற்றும் 5 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட ஜெனரேட்டர் செட் உள்ள குடும்பங்கள் கார்டை சமர்ப்பிக்க வேண்டும்.
- 80 சதுர மீட்டர் வணிக இடத்தை வைத்திருக்கும் குடும்பங்கள் ரேஷன் கார்டுகளுக்கு தகுதியற்றவர்கள்.
- நகர்ப்புற குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் இருந்தால் அட்டையை ஒப்படைக்க வேண்டும்.
- ஆயுத உரிமம் உள்ளவர்கள் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும்.
அத்தகைய தகுதியற்றவர்களை அடையாளம் காண அரசு விசாரணை நடத்தி வருகிறது. அதிகாரிகள் மூலம், தகுதியற்றவர்கள் ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு, அதன் கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாதவர்கள் யாரேனும் ரேஷன் கார்டை ஒப்படைக்கவில்லை என்றால், விசாரணைக்குப் பிறகு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.