நாவல் பழத்தின் மீது, பலர் அதீத விருப்பம் கொண்டு இருப்பார்கள். அதுவும் இந்த நாவல் பழம் சீசன் வந்து விட்டால் போதும், கிராமப்புறங்களில் இருக்கின்ற நபர்கள் அனைவரும் இந்த நாவல் பழத்தை தேடி கிளம்பி விடுவார்கள்.
இந்த நாவல் மரம் காடுகளில், எளிதாக வளரும் தன்மை கொண்டது. சற்றே துவர்ப்பு சுவையுடன் கூடிய இந்த நாவல் பழம், பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு மருத்துவ பலன்களையும் கொண்டிருக்கிறது. இந்த நாவல் பழத்தின் நன்மைகள் தொடர்பாக தற்போது நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த நாவல் பழத்தில் கால்சியம், விட்டமின் பி1, பி2, பி5 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழத்தை தொடர்ச்சியாக ஒருவர் சாப்பிட்டு வந்தால், தோல் சுருக்கங்கள் நீங்கி பொலிவுடன் இருக்கும்.
இந்த பழத்தை சாப்பிடுவது வயிற்றில் இருக்கின்ற புண்களை சரி செய்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த நாவல் பழத்தில் இருக்கின்ற ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
இந்த நாவல் பழத்தில் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல் சார்ந்த நோய்களை சரி செய்யும் தன்மை இருக்கிறது. இந்த நாவல் பழத்தில் செய்யப்பட்ட வினிகரை தண்ணீரில் கலந்து குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை முடிவுக்கு வரும். இந்த நாவல் மர இலையை கஷாயம் செய்து, அதோடு, தேன் கலந்து சாப்பிட்டால், பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும்.