அம்பானியின் மருமகள் அணிந்துள்ள வைர நெக்லஸின் மதிப்பு 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவர், மும்பையில் நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தன்னுடைய மகன்கள் மற்றும் மகளின் திருமணத்தை மிகப் பிரமாண்டமாக நடத்தினார். தற்போது இவரது மருமகள் ஷ்லோகா மேதாவிடம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த வைரஸ் நெக்லஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வைர நெக்லஸின் மதிப்பு ரூ.500 கோடி என்று கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா திருமணத்தின்போது, நீடா அம்பானி, தனது மருமகளான ஷ்லோகாவுக்கு, உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைர நெக்லஸை திருமணப் பரிசாக அளித்தார். லெபானிஸ் நகை வடிவமைப்பாளரான மௌவாத் வடிவமைத்த இந்த வைர நெக்லஸ், குறைபாடுகள் இல்லாத மிகப்பெரிய வைரக்கற்களுடன், 91 வைரங்கள் கொண்டு தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப்போல ஒரு வைர நெக்லஸை உருவாக்குவது மிகக்கடினம் என்பதும், இந்த வைர நெக்லஸ், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.