மேலாடை இல்லாமல் வீட்டு வேலைகள் செய்துவரும் அமெரிக்காவை சேர்ந்த டிக்டாக் பெண் பிரபலம், ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,80,000 சம்பளமாக பெறுகிறார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள டாம்பா கவுண்டியில் சம்மி என்கிற டிக்டாக் செய்து வரும் பெண் ஒருவர், மேலாடை இல்லாமல் அரை நிர்வாணத்துடன் வீட்டுவேலைகளை செய்வதற்கு ஒரு மணி நேரம் சம்பளமாக (300 டாலர்கள்) இந்திய மதிப்பின் படி, ரூ.26,000 பெறுகிறார். இவ்வாறாக நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்துவரும் அவர், சுமார் (2,230 டாலர்கள்) ரூ.1,82,000 சன்மானமாக பெறுகிறார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய சம்மி, “இன்று நான் 5 வீடுகளை சுத்தம் செய்தேன், அதற்காக ஒரு மணி நேரத்திற்கு $300 (ரூ.26,000) வசூலிக்கிறேன். எனக்கு ஒரு பாதுகாவலர் இருக்கிறார், அவர் வெளியே காரில் அமர்ந்துள்ளார். ஒருவேளை எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவர் என்னை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றுவிடுவார். நான் சம்பாதிக்கும் பணத்தில் 30% வருவாயை அந்த பாதுகாவலரிடம் சம்பளமாக கொடுக்கிறேன் என்று அவர் கூறினார்.” என்று கூறியுள்ளார்.
மேலும் தனக்கு மேலாடையின்றி சுத்தம் செய்வது மிகவும் பிடிக்கும் என்றும்,தனது மற்ற சமூக ஊடக நண்பர்களிடம் இது பற்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார். நீங்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவரா? அப்படியென்றால் என்னை நீங்கள் தாராளமாக உங்கள் வீட்டை சுத்தம் செய்ய அழைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.