அமெரிக்காவில் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் 8ல் ஒருவர் ஆணுறைகளை தங்களுடன் எடுத்துச் செல்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
துக்க நிகழ்ச்சிக்கு செல்ல அமெரிக்கர்கள் காண்டத்தை தேடுகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக துக்க வீடுகளுக்கு செல்பவர்கள் முடிந்த வரை சடலத்தை எடுக்கும் முன் செல்ல வேண்டும் என்று தான் நினைப்பார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறுவது மற்றும் அடுத்தக்கட்ட பணிகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நோக்கில் துக்க நிகழ்ச்சிகளில் பலரும் பங்கேற்கின்றனர்.
ஆனால், அமெரிக்காவில் துக்க நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் ஆணுறைகளை தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். அமெரிக்காவில் உள்ள முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ஒன்று 18 முதல் 35 வயது வரை ஆன்லைனில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். அதில் துக்க வீடுகளில் தங்களது சோகத்தையும், வலியையும் மறக்க உடலுறவு கொள்ள விரும்புவதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, அதற்காகவே துக்க வீடுகளுக்கு செல்லும் போது காண்டத்தை தங்கள் கையோடே எடுத்துச் செல்வதாகவும் ஆய்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். துக்க வீடுகளில் கூட எந்த சூழலுக்கும் தயாராக இருக்கவே அமெரிக்கர்கள் ஆணுறையை எடுத்துச் செல்ல விரும்புவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் 8ல் ஒருவர் ஆணுறைகளை தங்களுடன் எடுத்துச் செல்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி 65 சதவிகித மக்கள் தங்களது முதல் டேட்டிங் அனுபவத்திற்கு காண்டத்தை எடுத்துச் செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம் பெட் ரூமில் தங்களது கட்டிலுக்கு அருகில் ஆணுறைகளை வைத்துக்கொள்ள 52 சதவிகிதம் பேர் விரும்புகின்றனர். மேலும், தங்கள் வாலட்டில் எப்போதும் காண்டத்தை வைத்துக்கொள்ள 52 சதவிகித அமெரிக்க ஆண்கள் விரும்புவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலிருந்து அமெரிக்கர்களின் அன்றாட வாழ்வில் காண்டத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடிகிறது.