fbpx

கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்…

கர்நாடக மாநிலம் விஜயபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் இன்று காலை 2 முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.. காலை 6.22-க்கு 4.9 என்ற ரிக்டர் அளவிலும், 6.24 மணிக்கு 4.6 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை..

இதனிடையே அந்தமான் நிகோபர் தீவிலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் பதிவானது.. போர்ட் பிளேர் நகரிலிருந்து 233 கி.மீ தென் கிழக்கே அதிகாலை 2.35 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.8 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

விலையில்லா பாடப்புத்தகம்..! அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

Sat Jul 9 , 2022
விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரை அடுத்து, புத்தக விநியோகம் குறித்து வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

You May Like