fbpx

நண்பனின் அண்ணி மீது தீராத ஆசை..!! நிர்வாண வீடியோ கால்..!! சொல்லியும் திருந்தல..!! கடைசியில் மச்சினன் உயிர் போச்சே..!!

கர்நாடக மாநிலம் கோலார் நகரின் சுல்தான் திப்பசந்திராவில் வசித்தவர் ரோஹித் (22). இவரது நண்பர் அம்ஜத் (24). இவர்கள் இருவரும் தூரத்து உறவினர்களும் கூட. இதனால், அம்ஜத், எப்போதாவது ரோஹித் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போதுதான், ரோஹித்தின் அண்ணி மீது அம்ஜத்துக்கு ஆசை வந்துள்ளது. இதனால், முன்பைவிட, அடிக்கடி ரோஹித் வீட்டுக்கு வர ஆரம்பித்தார். ரோஹித்துக்கு தெரியாமல், அவரது அண்ணியின் செல்போன் நம்பரை பெற்று, தினமும் ஆபாசமாக பேச துவங்கியிருக்கிறார்.

நாளுக்கு நாள் இந்த பாலியல் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் அண்ணிக்கு வீடியோ காலும் செய்திருக்கிறார் அம்ஜத். உறவுக்காரர்களிடம் தன்னால் பிரிவினை வந்துவிடக்கூடாதே என்று ஆரம்பத்தில் அண்ணி நினைத்தார். ஆனால், எல்லை மீறிய டார்ச்சரை அம்ஜத் தரவும், தன்னுடைய மைத்துனர் ரோஹித்திடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரோஹித், தன்னுடைய உறவினர்களுடன், அம்ஜத் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். தன்னுடைய அண்ணிக்கு தொல்லை கொடுத்தால், சும்மா விடமாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆனால், அத்தனை பேர் கண்டித்தும்கூட அம்ஜத் திருந்தவில்லை. மறுபடியும் அண்ணிக்கு போன் செய்ய ஆரம்பித்தார். 3 நாட்களுக்கு முன்புகூட, ரோஹித் முன்னிலையிலேயே, அவரது அண்ணிக்கு வீடியோ கால் செய்துள்ளார் அம்ஜத். இதனால், மீண்டும் தகராறு வெடித்துள்ளது. அன்றைய தினமே வேலை விஷயமாக, பெங்களூருக்கும் கிளம்பி சென்றுவிட்டார் ரோஹித். நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது தனியாக பேச வேண்டும் என்று சொல்லி, புறநகர் பகுதியான ஜமால் நகர் அருகே, ரோஹித்தை வரவழைத்தார் அம்ஜத்.

ரோஹித் அங்கு சென்றதுமே மீண்டும் அண்ணி குறித்த வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரோஹித்தின் மார்பில் சரமாரி அம்ஜத் குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்திலேயே சுருண்டு விழுந்தார். நேற்று காலை ரோஹித் சடலமாக கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள், கோலார் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், ரோஹித்தின் உடலை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கொலையாளி அம்ஜத்தையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : கணவன் சாப்பிட்ட தட்டில் மனைவி சாப்பிட்டுவது ஏன்..? பாலூட்டும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா..?

English Summary

Amjat has a crush on Rohit’s sister-in-law. Due to this, Rohit started coming home more often than before.

Chella

Next Post

உங்க வீட்டில் WiFi சிக்னல் வேகமாக இல்லையா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..

Wed Oct 30 , 2024
WiFi signal not fast at your home? So try these tips..

You May Like