விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு குப்பையை அகற்ற சென்ற காவலருக்கு அடி கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. விழுப்புரம் அருகே உள்ள மேல்மலையனூர் பகுதி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற காவலரை மூதாட்டி ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் செக்கடி குப்பம் என்ற கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரை தொடர்ந்து வட்டாட்சியர் அலெக்சாண்டர் தலைமையில் அந்த ஊர் காவல்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டின் உரிமையாளரான மூதாட்டி ஒருவர் திடீரென எழுத்து காவல்துறையினரை கன்னத்தில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது . அந்தப் பகுதியில் இருக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எப்போது தீர்ப்பு இருந்து வந்தது. இதன் காரணமாகவே காவல்துறையின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி வட்டாட்சியர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தங்களின் வீடுகளை எடுப்பதற்கு பொதுமக்களிடம் பலத்தை எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் பகுதியில் அமர்ந்திருந்த மூதாட்டியை போலீசார் மற்றும் பொதுமக்கள் வேறொரு இடத்தில் சென்று அமருமாறு எழுப்பினர். அப்போது கோபமடைந்த மூதாட்டி பெண் காவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்து விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தற்போது காவல்துறை விசாரித்து வருகிறது. பொதுவாகவே சாலையோரம் குடியிருக்கும் பொது மக்களை ஆக்கிரமிப்புகள் என்று கூறி அவர்களது வீடுகளை இடிக்கும் பழக்கம் தொடர்கதையாக நடந்து வருகிறது. அந்தக் கோபத்திலும் விரக்தியிலும் மூதாட்டி அந்த காவலரை தாக்கி இருக்கலாம் என அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக மூதாட்டி வீதியில் இந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற காவலருக்கு மூதாட்டி இடம் இருந்து அடி கிடைத்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.