fbpx

திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்வதை மறுக்க முடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்வதை மறுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் வசித்து வரும் 25 வயது பெண் ஒரு தனது கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார்.. தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கியது.. அதாவது, “இது குழந்தையைக் கொல்வதற்கு சமம்” என்று கூறிய நீதிபதிகள் திருமணமாகாத ஒரு பெண்ணின் உறவு நிலை மாறியதன் அடிப்படையில் 20-24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை கலைக்க சட்டம் தடை செய்வதை அனுமதிக்க முடியாது என்று மனுவை நிராகரித்தனர்..

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது இருவரின் சம்மதத்துடன் நடந்த உறவின் விளைவாக கர்ப்பம் ஏற்பட்டதாகவும், ஆனால் தனது துணை தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் கர்ப்பத்தை கலைக்க விரும்புவதாகவும் அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். திருமணமாகாத பெண் என்ற களங்கம் ஏற்படும் என்று அஞ்சுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள் “ “ மனுதாரர் தேவையற்ற கர்ப்பத்தை அனுபவிப்பது பாராளுமன்ற நோக்கத்திற்கு எதிரானது என்றும், திருமணமாகாதவர் என்ற அடிப்படையில் மட்டுமே சட்டத்தின் கீழ் சலுகைகளை அவருக்கு மறுக்க முடியாது என்றும் நாங்கள் கருதுகிறோம். திருமணமான பெண்ணுக்கும் திருமணமாகாத பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடு, நாடாளுமன்றம் அடைய விரும்பும் பொருளுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவிஹ்ட்தனர்..

திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்ணுக்கு இடையேயான சட்டத்தில் உள்ள வேறுபாடு கர்ப்பத்தை கலைக்கும் உரிமையில் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கர்ப்ப காலத்தில் உறவு நிலை மாறிய திருமணமாகாத பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி வழங்கினர்.. மேலும் திருமணமாகாத பெண் என்ற காரணத்திற்காக மனுதாரருக்கு சலுகை மறுக்கப்படக்கூடாது” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்… இந்த உத்தரவு, பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் கருவை கலைக்க முடியும் என்று டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைத்த மருத்துவ வாரியத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்…

இந்தியாவில் 20-24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பங்களுக்கு, இரண்டு மருத்துவர்களின் கருத்து தேவை.. கர்ப்பத்தின் தொடர்ச்சியானது கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா அல்லது அவரது உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்கு கடுமையான காயத்தை ஏற்படுத்துமா” என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

ரூ.15 கோடி மதிப்பிலான சாலையை திறந்து வைத்த பிரதமர்..! நான்கே நாட்களில் மிகப்பெரிய பள்ளம்..!

Fri Jul 22 , 2022
உத்தரப்பிரதேசத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பந்தல்கண்ட் அதிவிரைவு சாலையில் நான்கே நாட்களில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது சர்ச்சையாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் நகரில் இருந்து தலைநகர் டெல்லியை இணைக்கும் வகையில், ரூ.14,850 கோடி மதிப்பீட்டில் பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டது. இதனை கடந்த 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து போக்குவரத்துக்காக அர்ப்பணித்தார். இந்நிலையில், சாலை […]
’

You May Like