மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்க்கு சாரண சாரணியர் இயக்கத்தரைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படக்கூடியது. இதன் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே செயல்படுவது வழக்கம் . சில காலம் எச் ராஜா இந்த பதவியில் இருந்தார். பின்னர் இவ்வியக்கத்தின் தலைவர் பதவிக்கான போட்டியில் எச்.ராஜா தோல்வியுற்றார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக மீண்டும் சாரண சாரணியர் இயக்கத்தின் மீது மீண்டும் கவனம் கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இந்த இயக்கத்தில் சிறந்து செயல்படுபவர்களுக்கு வழங்கும் விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த சுதந்திரதினத்தில் இவ்வியக்கத்தினருக்கு விருதுகளை வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அமைச்சரை எதிர்த்து யாரும் போட்டியிட மனு அளிக்காத காரணத்தால் அன்னபோஸ்ட்டாக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது