fbpx

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்– தவெக தலைவர் விஜய் பதிவு!

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் விஜய் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.

அம்பேத்கரின் 134ஆவது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

கிராமங்களில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவங்களையும், கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக்கூறி இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகள் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், அம்பேத்கர் குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Post

Water: அனைத்து ரயில்வே நிலையங்களிலும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு...!

Sun Apr 14 , 2024
கோடை காலம் மற்றும் வெப்ப அலைகளை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே அனைத்து நிலையங்களிலும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதோடு, அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில், தற்போது நிறுவப்பட்டுள்ள அனைத்து நீர் இயந்திரங்கள1 செயல்படுகின்றனவா என்பதையும், பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு கிடைக்கின்றனவா என்பதையும் சரிபார்க்க ரயில்வே கோட்டங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய விநியோகத்தை அதிகரிக்க முக்கியமான […]

You May Like