fbpx

Annamalai | உதயநிதி முதல் திருமாவளவன் வரை..!! அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்..!! அதிர்ச்சியில் திமுக தலைமை..!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவில் இருந்த ஜாபர் சாதிக் உள்பட அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப்பொருள் கடத்தல், பள்ளி மாணவர்களைக் கூட விட்டு வைக்காத போதைப் பொருட்களின் தாக்கம், தமிழகம் முழுவதுமே பரவலாக போதைப்பொருள்கள் கிடைப்பது ஆகியவைக் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக் காட்டி, திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.

தமிழக பாஜகவின் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர், ஒரு மேம்போக்கான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வலியுறுத்தியிருந்தார். தமிழக முதலமைச்ச மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பில் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிடிபட்டால், அவர்களின் சொத்துக்களைத் தமிழக அரசு பறிமுதல் செய்யும் என முதலமைச்சர் எச்சரித்திருந்த அதே காலகட்டத்தில், அவரது கட்சியான திமுகவின் நிர்வாகி ஒருவர், போதைப்பொருள் விற்பனை செய்து முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம் செல்வந்தராக மாறியுள்ளார்.

இவர் சொன்ன உளவுத்துறையின் செயல்பாடுகளை சமீபத்திய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று, டெல்லியில் சூடோஎபெட்ரீன் என்ற அதிக போதை தரும் செயற்கை வேதிப்பொருளை, சத்துமாவு, உலர்ந்த தேங்காய்த் தூள் என்ற போர்வையில் கடத்த முயன்ற, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது. இந்த போதைப்பொருள் மாஃபியாவின் தலைவனாகச் செயல்பட்டவர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக அயலகப் பிரிவின் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஆவார். கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை, சுமார் 3,500 கிலோ சூடோஎபெட்ரீன் வேதிப்பொருளை இதுவரை அனுப்பியிருப்பதும், சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகியோர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பல திமுக தலைவர்களுடனும், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன், கட்சிக்கு நன்கொடை, நிவாரண நிதி உள்ளிட்டவை வழங்கி நெருக்கமாகச் செயல்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்சிகளுக்கு வழங்கிய நிதி குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

Read More : Lok Sabha | ’நம்ம கேட்டத தரமாட்டாங்க போலயே’..!! நேரடியாக தலைமையை அழைத்து வரும் செல்வப்பெருந்தகை..!!

இந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை, தமிழகத் திரைப்படத் துறையில் முதலீடு செய்து, கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தங்களது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, சமூகத்தின் நலனைப் புறக்கணித்த அவரது திரைத்துறை கூட்டாளிகள் யார் யார் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். போதைப்பொருள் கடத்தல் என்பது நம் தேசத்தின் மீது நடத்தப்படும் போர் என்பதை மனதில் கொண்டு, இந்த கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக, தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

English Summary : Drugs smuggling case… Annamalai request to take action

Chella

Next Post

Indian Railways| ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி.! பயணிகள் ரயில் கட்டணம் கணிசமாக குறைப்பு.!

Tue Feb 27 , 2024
பயணிகள் ரயில் கட்டணத்தை (Passenger Train fare) கணிசமாக குறைக்கப் போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 40 முதல் 50 சதவீதம் வரை ரயில் கட்டணம் குறைய உள்ளது என்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவிட் லாக் டவுனுக்கு பிறகு பயணிகள் மற்றும் மெமு ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டன. இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரித்தன. கோவிட் சமயங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவே இதனை அமல்படுத்தியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. […]

You May Like