பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நான் விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் பல பரபரப்பு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

நடிகை காயத்ரி ரகுராமின் பிரச்சனை முடிவுக்கு வருவதற்குள், மற்றொரு நடிகையும், இயக்குனருமான பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதில், ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் விலகுவதாக’வும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வந்தது, ஆனால் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவில், “நான் பாஜகவில் சேரவே இல்லை. பின்பு எப்படி வெளியே வர முடியும்?. நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தவொரு பக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், எனது பார்வையின் அடிப்படையில் நல்லதாக இருந்தால் பராட்டுகிறேன்; தவறாக இருந்தால் விமர்சிக்கிறேன். எனக்கு அரசியல் தொடர்புகளோ ஆதரவோ இல்லை, அரசியலில் நுழையும் திட்டமும் இல்லை, நான் ஆன்மீகத்தை தொடர விரும்புகிறேன். மத அடையாளங்களை அல்ல என, லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.