சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர், அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாக்கோட்டையை சேர்ந்த சுடர்ராஜ், நேற்றிரவு குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அவரது இளைய மகன் செல்வகுமார் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். தனியாக இருந்த செல்வ குமாருக்கு அவரது சித்தப்பா உணவளிக்க சென்றபோது, வீடு உள்பக்கம் பூட்டி இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது செல்வகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அங்கு வந்த காவல்துறையினர் அவர் வீட்டை சோதனை செய்ததில், சரியாக படிப்பு வராததால் தற்கொலை செய்து கொண்டதாக செல்வகுமார் கடிதம் எழுதி வைத்துள்ளதாக, காவல்துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்கொலை எண்ணம் வந்தால் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.