fbpx

இன்னும் ஒரு தற்கொலை முயற்சியா? சேலத்தில் பரபரப்பு …அரசு பள்ளி மாணவியின் செயலால் அதிர்ச்சி …!

சேலம் அருகே உள்ள பள்ளி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவி ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மனைவியின் தந்தை இறந்துவிட்டதால், அவரது பெரியப்பா அவரை தினமும் பள்ளிக்குச் சென்று விட்டு வருவது வழக்கம் அதன்படி இன்று காலை அவரது பெரியப்பா பள்ளியில் அவரை விட்டு விட்டு வந்தார். பள்ளியில் பிரேயருக்கு செல்லாமல் அமர்ந்திருந்த மாணவி திடீரென பள்ளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உடனடியாக சென்று விசாரணை நடத்தினார். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் நிறுபகளிடம் கூறியது, மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளியில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் அவரது குடும்ப பிரச்சனையால் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும் தற்பொழுது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.

Baskar

Next Post

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. தந்தையின் கோரிக்கை நிராகரிப்பு..

Mon Jul 18 , 2022
மாணவி உடலை மறு பிரதேச பரிசோதனை செய்யும் குழுவில் தங்கம் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.. போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதுடன், […]

You May Like