fbpx

கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? ரூ.25 லட்சம் வரை..! உடனே விண்ணப்பியுங்கள்..!

தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான அரசாணையில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் தங்களது தொழிலை நேரடியாகவோ, வாரிசு தாரர் மூலமாகவோ மீண்டும் அமைக்கவோ அல்லது புதிய தொழில் தொடங்கவோ உதவிடும் வகையில் 25 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? ரூ.25 லட்சம் வரை..! உடனே விண்ணப்பியுங்கள்..!

மேலும், இந்த திட்டத்தின்படி, 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுகளில் கொரோனா நோய்த் தொற்றால் தொழில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எற்னும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக கொரோனா தொற்றால் தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுப் பெரிய அளவில் எழுந்துவந்தது. இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டபோது, இப்படியான ஒரு அறிவிப்பு புதிய தொழில் தொடங்கவும், நிறுத்திவைத்த தொழிலை மீட்டெடுக்கவும் உதவும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Chella

Next Post

முதலிடம் நோக்கி இந்தியா.. மக்கள்தொகை பெருக்கத்தை பற்றி நாம் ஏன் அச்சப்பட வேண்டும்..?

Wed Jul 13 , 2022
மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா உலக சாம்பியனாக மாறும் என்று தெரியவந்துள்ளது. ஆம்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டும், மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை 850 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2050ல் இது 970 மில்லியனாக இருக்கும். 2100-ம் ஆண்டுக்குள் இந்த மக்கள் தொகை 1,040 […]

You May Like