கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற கொடுங்குலம் பகுதியில் வருகிறார் சென்ற 16 வருடங்களுக்கு முன்னர் விஜி குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகளும் இருக்கின்றனர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சந்தியா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். முறைப்படி சந்தியா கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நான் சமீபத்தில் விஜின் குமார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் சந்தியாவுக்கு தெரியாமல் 18 வயதான இளம் பெண் ஒருவரை 2தாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அறிந்து கொண்ட சந்தியா தன்னுடைய கணவரிடம் அது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அவர் உனக்கு சொந்தமான சொத்தை எழுதி கொடுக்குமாறு உன் பெற்றோரிடம் கேட்டேன் ஆனால் அவர்கள் எழுதி கொடுக்கவில்லை. உன்னுடைய பெற்றோரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டேன்.
ஆனால் அதையும் அவர்கள் கொடுக்கவில்லை. நீயும் சொத்தை எழுதிக் கொடுக்காததால் 2வதாக திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்குவேன் என்று சந்தியா தெரிவித்தவுடன் விஜின்குமார் சந்தியாவை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்திருக்கிறார். அவரிடம் இருந்து தப்பி சென்ற சந்தியா மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஜின்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.