கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இனி இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், புதிதாக திருமணமான பெண்களுக்கு பணம் வழங்கப்படும். முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கும். அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படும். இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இம்மாத இறுதிவரை அவர்களுக்கு விண்ணப்பங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
Read More : அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் அண்ணாமலை..? அடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தானாமே..!!